தமிழ்நாட்டில் தினசரி தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்து 830ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில், தினசரி தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்து 830ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடுகள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 59 பேர் உள்பட, புதிதாக 15 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 9 ஆயிரத்து 508 பேர் ஆண்கள், 6 ஆயிரத்து 322 பேர் பெண்கள் ஆவர்.

சென்னையில் புதிதாக 4 ஆயிரத்து 640 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 181 பேரும், கோவை மாவட்டத்தில் 996 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 717 பேரும், நெல்லை மாவட்டத்தில் 680 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 546 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 13 ஆயிரத்து 502ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 

Exit mobile version