தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என்று இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது..
மழை குறித்த முன்னறிவிப்பு தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் மாதத்திற்கான மழைபொழிவை பொறுத்தமட்டில் தெற்கு தீபகற்ப பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், ஆந்திர கடலோரப் பகுதிகளான ராயலசீமா, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
1961 முதல் 2010 வரையிலான கணக்கீட்டில் 44 புள்ளி 54 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என்றும், அது இந்த ஆண்டுக்கான மழை அளவில் அதிகப்படியானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை, தெற்கு தீபகற்ப பகுதிகளின் தென்மேற்கு பகுதிகளில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.