தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெலங்கானா வரை, உள்தமிழகம் வழியாக, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதாகவும், இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தூத்துக்குடியில் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.