தமிழகம் புதுச்சேரி இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா 2ம் ஆலையின் எதிரொலியால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டது.
தற்போது தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், தமிழகம் புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சென்னை, விழுப்புரம், கடலூர், சீர்காழி, சிதம்பரம், நாகை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், புதுச்சேரியில் இருந்தும் தமிழகத்திற்கு 50 பேருந்துகள் இயங்குகிறது.
புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கிய நிலையில், மற்ற மாநிலங்களுக்கான தடை தொடர்கிறது.