பிரதமருடன் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் சந்திப்பு

மேகதாது அணை விவகாரம், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு நேரடியாக தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்று, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கின்றனர்.

டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் அபாயம் இருப்பதாக பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணைப் போக கூடாது எனவும், மத்திய அரசு நேரடியாக இந்த விவகாரத்தில் தலையீட்டு தீர்வு காண வேண்டுமென பிரதமரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளதால், கோதவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும்,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version