காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்ப்பால் மேகதாட்டு விவாதம் தவிர்ப்பு

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 5ஆவது கூட்டத்தில், மேகதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் அணுகுமுறைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 5வது கூட்டம், மத்திய நீர்வள ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் கலந்துக் கொண்டார்.

தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், மேகதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடக தரப்பில் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். தமிழக அரசின் கடும் எதிர்ப்பு காரணமாக கூட்டத்தில், மேகதாட்டு விவகாரம் தொடர்பான விவாதம் தவிர்க்கப்பட்டது.

Exit mobile version