இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் படி, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகள் நண்பகல்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அறைகளிலேயே உணவு வழங்க வேண்டுமென்றும், உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் ஏற்கனவே 25 நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல், 20 நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கப்படாது.
ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அறைகளிலேயே உணவு வழங்க உத்தரவு
மேலும், விடுதியில் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை
திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிப்பு
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், 6ம் தேதி முதல் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை தொடர்ந்து ஊரகப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது
சனி, ஞாயிற்று கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை தொடரும்.))