தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

அரசுத் துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிக்க தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தொடர்ந்து, அரசுத் துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிக்க தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. கடந்த 2ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை இன்று முதல் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பின் சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்படும். பின்னர் 11ம் தேதி முதல், அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இருக்கின்றனர்.

Exit mobile version