இந்தியாவிலேய, சத்துணவு திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் சரோஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கு சுகாதார பேழைகள், கையேடுகள் வழங்கும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதனை மாநில சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, சத்துணவு மையங்களில் 43 ஆயிரம் மையங்களுக்கு சுகாதார பேழைகள் வழங்கப்படுவதாகவும், இதற்காக சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் மூலம் 52 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்தியாவிலேய சத்துணவு திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.