குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு காலத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து விளக்கம் அளித்தார்.மேலும், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய சிஎம்ஆர் நிலுவைத் தொகை 2 ஆயிரத்து 609 கோடி ரூபாயை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியில், 85 சதவீத அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, உபகரணங்கள் வாங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்துக்குள் அந்த பணிகள் நிறைவடையும் எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.