இன்வெஸ்ட் இந்தியா இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவும் எனத் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் முதலீட்டாளர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இன்வெஸ்ட் இந்தியா இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டதை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார்.