கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் ஊக்கம் தமிழகத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இட்டுச்செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
அவர், உடல் உறுப்புகள் தானத்தில் 4வது ஆண்டாக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் கின்னஸ் சாதனை படைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.