பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
மாநிலம் வாரியாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் 6-வது இடத்திலும் உள்ளது. இந்த காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தமிழகத்தில் நடப்பாண்டில் பன்றிக்காய்ச்சல் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் 7500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை, நடப்பாண்டில் மட்டும் 971 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.