பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். மாணவி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், கல்விக்காக நிதி ஒதுக்குவதை விட, கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறினார். பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.