இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திட்ட துவக்க விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.