தமிழ்நாடு ஹஜ் குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஹஜ் குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் தலைமையில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கடந்த மாதம் தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களை, மீண்டும் சென்னை அழைத்துவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் 11ம் தேதி முதல், விமானம் சென்னை வரவுள்ளது. ஹஜ் பயணிகளை எந்தவித சிரமம்மின்றி அழைத்து வருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜபார், செயலாளர் நிஜாமுதின் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், மத்திய காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version