தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை குறைத்து காட்ட பாரிசோதனை குறைக்கப்படுகிறதா?

தமிழ்நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை குறைக்கப்பட்டு கொரோனா தொற்றை குறைத்து காட்டி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

தமிழக அரசின் மெத்தனப்போக்கு, அரசு அறிவித்த முழு ஊரடங்கில் குளறுபடியின் காரணமான தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு அதிகரித்து வந்தது.

இதனால் ஏற்பட்ட நெருக்கடி தமிழக அரசை விழிபிதுங்க வைத்தது.

இதேபோல நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளை குறைக்க முடியாத நிலை ஏற்படட்டதால் தமிழக அரசுக்கு கையறு நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கடந்த 21ஆம் தேதி 36 ஆயிரத்து 184 ஆக இருந்து ஒரு நாள் தொற்று பாதிப்பு, நேற்று 27 ஆயிரத்து 936 ஆக குறைந்துள்ளது.

பாதிப்பு குறைந்து இருப்பது மகிழ்ச்சியடைய ஏற்படுத்தினாலும், பரிசோதனை குறைத்து பாதிப்பை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு ஏதுவாக கடந்த இரண்டு நாட்களாக பரிசோதனையை குறைத்து இருப்பது சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 30 ஆம் தேதி ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 351 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 672 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 30 ஆம் தேதி ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

31 ஆம் தேதி 1 லட்சத்து 53 ஆயிரத்து 264 பேருக்கும் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

பரிசோதனையை குறைத்து இருப்பதே தொற்று பாதிப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்பது இதன் மூலம் வெளிச்சதிற்கு வந்துள்ளது.

பரிசோதனையை அதிகப்படுத்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில்,

தமிழ்நாடு சுகாதார துறை பரிசோதனையை குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version