தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு முறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பருவமழைக்கு முன்பாக சென்னையில் மழை நீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை முறைப்படுத்த அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெர்மன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் மழைநீர் சேமிப்பு முறைகளைப் போலச் சென்னையிலும் நவீன முறையில் மழைநீரைச் சேமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாலைகள், பூங்காக்களில் நவீன பிளாஸ்டிக் கலன்களைப் பூமிக்கடியில் புதைத்து மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தி மழை நீர் சேமிப்பதால், மழையின் அளவு அதிகரித்தாலும் அங்கு தண்ணீர் தேங்குவதில்லை.
60 டன் எடைகளை தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் கலன்களைச் சாலைகளில் அமைத்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வெளிநாடுகளில் இந்த பிளாஸ்டிக் கலன்கள் மூலம் மழை நீர் சேமிக்கப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க முடிவதாக
சென்னையின் சராசரி மழை அளவு 120 செண்டி மீட்டராக இருந்தாலும் மழை நீர் சேமிக்க முடியாமல் பெரும்பாலும் கடலில் கலக்கிறது. இதனை தடுக்கச் சென்னையில் உள்ள பூங்காக்களில் பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மழைநீர் சேமிப்பதோடு நிலத்தடி நீரின் அளவையும் உயர்த்த முடியும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது.