தமிழக அரசு திரைக்கலைஞர்கள் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை வருகிற 22 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக, திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ன. இதனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திரைக்கலைஞர்கள் யாரையும் தமிழக அரசு பிரித்து பார்ப்பதில்லை என்றார். பிரச்சனைக்குரிய காலக்கட்டங்களில் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் திரைப்படம் வெளியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை அமைச்சர் கடம்பூர் ராஜு சுட்டிக்காட்டினார்.