ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது . இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாயை வேதாந்த நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செலவிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பத்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.