வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டம் நடத்துபவர்கள், 28ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடம் காலியானதாக கருதப்படும் என்றும், காலி பணியிடங்கள் குறித்த உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் கற்பித்தல் பணி பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.