ஜூன் மாதத்துக்கான நீரை உடனடியாக திறக்க தமிழக அரசு வலியுறுத்தல்

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9ஆவது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் நடைபெற்றது. இதுவரை ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. வருகிற 25ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த முறை நடந்த கூட்டத்தில் அணையின் நீர் இருப்பு குறித்த தரவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எழுத்து வடிவமாக சமர்ப்பித்தனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார், இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், வழக்கமான அளவை விட குறைவான மழை பெய்துள்ளதாகவும், அடுத்த கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version