தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள ஏரியில் நீர் நிரம்பியிருக்கும்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வருவது வழக்கம். இந்நிலையில் கோடையின் காரணமாக வறண்ட ஏரியை தூர்வாரி, அதில் இருக்கும் வண்டல் மண்ணை விலையில்லாமல் விவசாயிகள் எடுத்துக் செல்லும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் உத்தரவின்படி விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை மேம்படுத்துவதற்காக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.