தண்ணீர் பிரச்சனை குறித்து திமுகவினர் தொடர்ந்து ஏதாவது குறைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களை தூர் வாரும் பணிகளுக்காக தமிழக அரசு 6 கோடியே 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து கழகத்திற்கு கொண்டு வரும் பணியில், இதுவரை 4 ஆயிரம் பேருந்துகள் செயல்பாட்டில் இருப்பதாக கூறினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுடன் கூடிய புதிய இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும் என்றார் அவர். தண்ணீர் பிரச்சனை குறித்து திமுகவினர் ஏதாவது குறைகளை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும், குடிநீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.