நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக 4 அணைகளிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக மேலும் நான்கு அணைகளை இன்று திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, அடவிநயினார் கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து, பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று , இன்று முதல் செப்டம்பர் மாதம் 25 ம் தேதி வரை, இந்த 4 அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுமார் 8 ஆயிரத்து 225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version