தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்ல அலுவலகத்தில் சீனாவில் உள்ள பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவர் பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில், சாலை, மேம்பாலம், மெட்ரோ ரயில், குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், நிதி துறை செயளாலர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் அகியோர் கலந்து கொண்டனர்.