ஐபிஎஸ் அதிகாரிகள் 26 பேரை இடம் மாற்றம் அளித்தும் தமிழக அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் 26 பேரை இடம் மாற்றம் செய்தும், ஒருசிலருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

அதன்படி தென் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் ஆணையரான மகேஷ் குமார் அகர்வால், ஆபரேஷன் பிரிவின் ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மாநகர காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி வெங்கடராமன் சைபர் கிரைம் பிரிவின் ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை மாநகர நவீனமயமாக்கல் ஐஜி. வினித் தேவ் வாங்க்டே, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மாநில குற்றவியல் ஆவண காப்பக டிஜிபி கரன் சின்ஹா சென்னை காவல்துறை பயிற்சி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் சரக டிஐஜி செந்தில் குமார் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்

சிபிசிஐடியின் ஐஜி ஆக இருந்த ஸ்ரீதர் சென்னை காவல்துறை நவீன மயமாக்கல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றிய பிரேம் ஆனந்த் சின்ஹா ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜி ஆக பணியாற்றி வரும் வனிதா, ஐஜி ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு அச்சு பிரிவின் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மொத்தம் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version