தமிழக அரசு தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இனி ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர், மழைநீர் சேமிப்பின் அவசியம் மற்றும் அதனால் நமக்கு மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கு ஏற்படும் பயன்களை அனைவரும் அறிந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்துள்ளோம் என்று கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர், தமிழக அரசு தனது கடமையை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது சுலபமல்ல என்றும், அவரவர் இருப்பிடத்தில் மழைநீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வு என்பதை அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளதாகவும், அதை தமிழக மக்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் சேமிக்கும் மகத்தான பணியில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்போம் என உறுதிக் கொள்வோம் என்று அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version