தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

தர்பார் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் தர்பார் திரைப்படம் 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தர்பார் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, தர்பார் படத்திற்கு 4 நாட்களுக்கு சிறப்புகாட்சிகளை திரையிட, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 9,10,13,14 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிளை திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

Exit mobile version