மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு : அடுத்த வாரத்தில் விசாரணை -உச்சநீதிமன்றம் அறிவிப்பு

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்துச் செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேகேதாட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Exit mobile version