மலேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்

மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய இலக்கியாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மலேசியாவில் நடந்த பல நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக 21 பெண்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து நான்கு பெண்கள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் இந்தியாவும் கனடாவும் மோதின. இதில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த இலக்கியா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இதனையடுத்து தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version