கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம்

முழு ஊரடங்கிலும் கட்டுப்பாடுகளுடன் இயங்கிய காய்கறிக் கடைகளில் மக்கள் நெருக்கமாக முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் காய்கறி, மளிகைக் கடைகள் பகல்12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகளில் பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கும் வியாபாரிகள், இதனால் தொற்று பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கின்றனர்.

பொதுமக்கள் பொறுமையாக தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் செல்லுமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version