ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்

ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ள சூழலில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பழங்களை விற்க அனுமதித்துள்ள தமிழக அரசு,

அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை பொருட்கள் டோர் டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version