தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 158 இடங்களும், அதிமுக கூட்டணி 76 இடங்களும் பெற்றுள்ளன.

15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

அதிமுக தலைமையிலான அணியில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றன.

தேர்தலில் பதிவான வாக்குகள், நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே கடும் இழுபறி நீடித்தது. இறுதியாக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.

76 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக கூட்டணி, வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது.

Exit mobile version