"குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு புறக்கணிப்பு" வெளுத்துப்போன திமுகவின் கையாலாகாத தனம்

டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்தி தேர்வாகாமல் போனதற்கு பின்னணியில் இருக்கும் திமுகவின் கையாலாகாத தனத்தை விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு….

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி டெல்லியில் மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் வாகன அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு அந்த வாகன அணிவகுப்பில் தமிழக ஊர்தி தேர்வு செய்யப்படாததுதான் தற்போதைய ப்ரேக்கிங் நியூஸ்.

குடியரசு தின விழா ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியின் கருப்பொருள் அதாவது தீம் அடங்கிய முன்மொழிவுகளை கடந்த செப்டம்பம் மாதம் 16ம் தேதியே 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளிடம் கேட்டிருந்தது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

செப்டம்பர் 27ம் தேதி கடைசிநாளாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த அண்டு பங்கேற்பாளர்களுக்கு இந்தியாவின் சுதந்திரத்தில் 75 ஆண்டுகள் என்று தீம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழக அரசின் சார்பில் முன்மொழிந்த சில கருப்பொருட்களை மாற்றி அமைக்கச்சொல்லி ஏற்கனவே மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி இருந்த நிலையில் அதை திமுக அரசு அப்போது கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டிருந்தது தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

அதிலும் முதல்கட்ட சுற்றுகளுக்கு தமிழகத்தின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டே இருந்தது ஆனால், பாதுகாப்பு அமைச்சக குழு வழங்கிய அறுவுறுத்தல்களை தமிழக அரசு சட்டை செய்யவில்லை என்பது அக்குழுவின் வாதம்.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாடுகள் என்று பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த குழுவின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளும் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது நியதி.

இந்த ஆண்டு 21 முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்ட சூழலில் 12 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சக குழுவின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், தகுந்த நேரத்தில் தன் கடமையைச் செய்யாமல் கடைசி நேரத்தில் வந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டு தன் நாடக யுக்தியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது திமுக.

கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் 2016, 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் குடியரசுதின விழாவில் தமிழ்நாட்டு ஊர்திகள் இடம்பெற்றிந்தபோது, இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு ஏன் இடம்பெற முடியாமல் போனது என்ற ஒற்றைக் கேள்வியே போதும் திமுக அரசின் கையாலாகத்தன வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற…

 

Exit mobile version