தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்புதிய விதிமுறைகளின்படி தமிழக கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு இந்திய சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனரான ரூபா குருநாத் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் மற்ற நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் முதன்முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version