கோவைக்கு சென்ற முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை

கோவையில், அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளுக்கு, முதலமைச்சரின் வருகை தீர்வாக அமையும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகளுடனோ, கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடனோ, நோய்தொற்றை குறைப்பதற்கான எந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட 253 படுக்கைகளையும், அதன் அருகில் சித்தா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட 220 படுக்கைகளை மட்டும் பார்வையிட்ட முதலமைச்சர், அங்கிருந்து தனியார் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள படுக்கைகளை பார்வையிட சென்றுவிட்டார்.

கோவையில் நோய்தொற்றை குறைப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பை தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எந்த தகவலும் இல்லை.

முதலமைச்சரின் இந்த ஆய்வின்போது, முற்றிலும் பாதுகாப்பு இடைவெளியை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கடை பிடிக்காததால், தொற்று ஏற்படும் அபாயம் நிலவியது.

மேலும், இந்த பயணத்தின் போது செய்தியாளர்களின் சந்திப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version