3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7 ஆயிரத்து 139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில், PCA AUTOMOBILES நிறுவனத்தின் மோட்டார் வாகன உற்பத்தி துவங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ய்பு உருவாகியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், YANMAR ENGINE என்ற JAPAN நிறுவனத்தின் ENGINE உற்பத்தி துவங்கப்பட்டது. இதன்மூலம் 380 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 292 கோடி ரூபாய் முதலீட்டில் NDR INFRASTRUCTURE Pvt ltd நிறுவனத்தின், FTWZ உற்பத்தி துவங்கியது. இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
திருவள்ளூர் மாவட்டத்தில் 51 கோடி ரூபாய் முதலீட்டில் COUNTER MEASURES TECHNOLOGIES நிறுவனத்தின் துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் உற்பத்தி தொடங்கியது, இதன்மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில், ZF WIND ENERGY நிறுவனத்தின் காற்றாலைகளுக்கான கியர் பெட்டிகள் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் 29 கோடி ரூபாய் முதலீட்டில், KRISHNAVENI CARBON நிறுவனத்தின் இயந்திர கார்பன் உற்பத்தி தொடங்கியதன் மூலம் 168 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 635 கோடி ரூபாய் முதலீட்டில், ATHER ENERGY நிறுவனத்தின் மின் வாகன மற்றும் மின்னேற்று உற்பத்தி துவங்கப்பட்டது. இதன்மூலம் 4 ஆயிரத்து 321 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 270 கோடி ரூபாய் முதலீட்டில், AG&P என்ற SINGAPORE நிறுவனத்தின் எரிவாயு நிரப்பு நிலையங்களில் உற்பத்தி துவங்கியது. இதன்மூலம் 170 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
மொத்தம், 3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் முதலீட்டில், 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்மூலம் 7 ஆயிரத்து 139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.