உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது எனில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது வெறும் கண் துடைப்பா???

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைத்ததை எதிர்த்து தமிழக பாஜக பொதுசெயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வு தொடர்டபாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

குழு அமைப்பதாக தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்றதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசு கால அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிமுக ஆட்சியில் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பயில இடம் கிடைத்ததை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேள்வி எழுப்பினார்.

 

 

Exit mobile version