பிப்ரவரி 4ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், பிப்ரவரி 4ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், வரும் 4ம் தேதி காலை 10 மணியளவில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில், தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொழில்வளர்ச்சி, கொரோனா வைரஸ் பாதிப்பு, நகர்புற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version