16 நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 16 நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அதேபோன்று, மேகேதாட்டு அணை விவகாரம், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 16 நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 14 ஆயிரம் கோடியில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதால், 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version