மங்கம்மாபேட்டையில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?

அரக்கோணம் தொகுதிக்குட்டபட்ட மங்கம்மாபேட்டையில் சமுதாய கூடம் அமைக்க அரசு முன்வருமா என்று எதிர்கட்சி துணை கொறடா ரவி கேள்வி எழுப்பினார்.

மங்கம்மாபேட்டையில் 300க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்கள் சுப காரியங்கள் நடத்த சிரமப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், அங்கு சமூதாய கூடம் கட்ட தேவையான இடம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அமைச்சர், சமூதாய நலக்கூடம் கட்டுவதற்கான வரைமுறைகளை ஆராய்ந்து அந்த பகுதியில் சமூதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version