தமிழக பட்ஜெட்டில், உயர் கல்வித்துறைக்கு நான்காயிரத்து 584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு 476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைவினை மற்றும் கதர் துறைக்கு 211 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைக்கு 140 கோடி ரூபாயும், தொழில்துறைக்கு இரண்டாயிரத்து 747 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் கல்வி தரத்தை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2012 முதல் இதுவரை 28 லட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. சமூக நலத்துறைக்கு ஐந்தாயிரத்து 305 கோடி ரூபாயும், சிறுபான்மையினர் நலத்துறைக்கு 14 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.