சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர்லீக் போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச்சென்றது.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி கடந்த 4 ம் தேதி சென்னை முகப்பேரில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையும் திருச்சி அணியும் மோதின. இறுதிப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் போட்டி நடைபெற்றது. அடுத்தாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் திருச்சி அணியை சென்னை அணி 2-0 என்ற கணக்கில் எளிதாக வென்றது.
இதனையடுத்து 2019 ஆண்டுக்கான தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச்சென்றது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேஷன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.