டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான அறிவிப்பை அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்நிலையில் இதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருச்சி, கரூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகள் என்பதால், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் அவை சேர்க்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.