தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்….

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.

விழுப்புரம் தொகுதியில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறங்குகிறார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், எஸ்.பி.சண்முகநாதன்,

நிலக்கோட்டை தொகுதியில், தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொன்னேரி தனி தொகுதியில் சிறுணியம் பலராமன்,

திருத்தணியில் கோ.அரி, திருவள்ளூரில் பி.வி.ரமணா, ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன்,

மதுரவாயலில் அமைச்சர் பென்ஜமின், அம்பத்தூரில் வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாதவரம் மூர்த்தி மாதவரம் தொகுதியிலும், குப்பன், திருவொற்றியூரிலும், ஆர்.கே.நகரில் ஆர்.எஸ்.ராஜேஷ், கொளத்தூரில் ஆதிராஜாராம், ஜே.சி.டி.பிரபாகர் வில்லிவாக்கத்திலும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகரிலும் போட்டியிடுகின்றனர்.

விருகம்பாக்கம் விருகை வி.என்.ரவி, சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி, தியாகராய நகரில் பி.சத்தியநாராயணன், மயிலாப்பூரில் ஆர்.நட்ராஜ், வேளச்சேரியில், எம்.கே. அசோக், சோழிங்கநல்லூரில் கே.பி. கந்தன் ஆகியோர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஆலந்தூர் தொகுதியிலும், ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் கே.பழனியும், பல்லாவரத்தில் சிட்லப்பாக்கம் ராசேந்திரன், தாம்பரத்தில், சின்னய்யா, செங்கல்பட்டில் கஜேந்திரன், செய்யூர் தனி தொகுதியில் கணிதா சம்பத் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மதுராந்தகம் தனி தொகுதியில் மரகதம் குமரவேல், உத்திரமேரூரில் சோமசுந்தரம், அரக்கோணம் தனித் தொகுதியில் ரவி, காட்பாடியில் வி.ராமு, ராணிப்பேட்டையில், எஸ்.எம். சுகுமார், வேலூரில் எஸ்.ஆர்.கே. அப்பு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணைக்கட்டு தொகுதியில் வேலழகன், குடியாத்தம் தனி தொகுதியில் பரிதா, வாணியம்பாடியில் செந்தில்குமார், ஆம்பூரில் நஜர்முஹம்மத், ஜோலார்பேட்டையில், அமைச்சர் கே.சி.வீரமணி, ஊத்தங்கரை தனி தொகுதியில் தமிழ்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏ.கிருஷ்ணன் பர்கூரிலும், கே.அசோக்குமார் கிருஷ்ணகிரியிலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளியிலும், ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, ஒசூரிலும், அமைச்சர் கே.பி.அன்பழகன் பாலக்கோட்டிலும், ஏ.கோவிந்த சாமி பாப்பிரெட்டிப்பட்டியிலும் போட்டியிடுகின்றனர்.

அரூர் தனி தொகுதியில் வி.சம்பத்குமார், செங்கம் தனி தொகுதியில் எம்.எஸ்.நைணாக்கண்ணு, கலசப்பாக்கத்தில் வீ.பன்னீர்செல்வம், போளூரில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறில், தூசி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் தனி தொகுதியில் அர்ஜுணன், வானூர் தனி தொகுதியில் சக்ரபாணி, விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், உளுந்தூர் பேட்டையில் குமரகுரு, ரிஷிவந்தியத்தில், சந்தோஷ், கள்ளக்குறிச்சி தனித்தொகுதியில் எம்.செந்தில் குமார், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏ.நல்லதம்பி, கங்கவல்லி தனி தொகுதியிலும், ஜெயசங்கரன், ஆத்தூர் தனி தொகுதியிலும், சித்ரா, ஏற்காட்டிலும், மணி ஓமலூரிலும், சுந்தரராஜன், சங்ககிரியிலும், சேலம் வடக்கில் வெங்கடாச்சலம் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சேலம் தெற்கில் பாலசுப்ரமணியன், வீரபாண்டியில் ராஜமுத்து, ராசிபுரம் தனி தொகுதியில் வி.சரோஜா, சேந்தமங்கலத்தில் சந்திரன், நாமக்கல்லில் பாஸ்கர், பரமத்தி வேலூரில் சேகர் போட்டியிடுகின்றனர்.

திருச்செங்கோட்டில் பொன் சரஸ்வதி, குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி, ஈரோடு மேற்கில் கே.வி.ராமலிங்கம், காங்கேயத்தில் ஏ.எஸ்.ராமலிங்கம், பெருந்துறையில் ஜெயக்குமார், பவானியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

அந்தியூரில் கே.எஸ்.சண்முகவேல், கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் தனி தொகுதியில் பண்ணாரி, கூடலூர் தனி தொகுதியில் பொன்.ஜெயசீலன், குன்னூரில், கப்பச்சி வினோத், மேட்டுப்பாளையத்தில் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அவிநாசி தனி தொகுதியில் சபாநாயகர் தனபால், திருப்பூர் வடக்கில், விஜயகுமார், திருப்பூர் தெற்கில் குணசேகரன், பல்லடத்தில் எம்.எஸ்.எம். ஆனந்தன், சூலூரில், கந்தசாமி, கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் களம் காண்கின்றனர்.

அம்மன் கே.அர்ஜுணன், கோயம்புத்தூர் வடக்கிலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூரிலும், ஜெயராம், சிங்காநலூரிலும், செ.தாமோதரன், கிணத்துக்கடவு தொகுதியிலும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சியிலும், அமுல் கந்தசாமி வால்பாறை தனி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

உடுமலைப்பேட்டையில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளத்தில் மகேந்திரன், பழனியில் ரவி மனோகரன், ஒட்டன்சத்திரத்தில், நடராஜ், நத்தத்தில், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் பரமசிவம் வேடசந்தூர் தொகுதியிலும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரிலும், கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் முத்துக்குமார், குளித்தலையில், சந்திரசேகர், மணப்பாறையில் இரா. சந்திரசேகர், ஸ்ரீ ரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் பத்மநாதன், திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருவெறும்பூரில் குமார், மணச்சநல்லூரில் பரஞ்சோதி, முசிறியில் செல்வராசு ஆகியோர் களமிறங்குகின்றனர்.

துறையூர் தனி தொகுதியில் இந்திரா காந்தி, குன்னத்தில் ராமச்சந்திரன், அரியலூரில் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், பண்ருட்டியில் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத், குறிஞ்சிப்பாடியில் பழனிசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரத்தில் பாண்டியன்,காட்டுமன்னார் கோவில் தனி தொகுதியில் முருகுமாறன், சீர்காழி தனி தொகுதியில் பாரதி, பூம்புகாரில் பவுன்ராஜ், நாகப்பட்டினத்தில் தங்க கதிரவன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்திலும், சுரேஷ்குமார் திருத்துறைப்பூண்டி தனி தொகுதியிலும், ராஜமாணிக்கம் மன்னார்குடியிலும், பன்னீர்செல்வம் திருவாரூரிலும்,அமைச்சர் காமராஜ் நன்னிலத்திலும், எஸ்.வீரமணி திருவிடைமருதூர் தனி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாபநாசத்தில் கோபிநாதன், ஒரத்தநாட்டில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பேராவூரணியில் திருஞானசம்பந்தம், கந்தர்வக்கோட்டை தனி தொகுதியில் ஜெய பாரதி, விராலிமலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில், கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருமயம் தொகுதியில் வைரமுத்து, ஆலங்குடியில் தர்ம தங்கவேல், அறந்தாங்கியில் ராஜநாயகம், திருப்பத்தூரில் மருது அழகுராஜ், சிவகங்கையில் செந்தில்நாதன், மானாமதுரை தனி தொகுதியில் நாகராஜன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

மேலூரில் பெரிய புள்ளான்,மதுரை கிழக்கில் கோபால கிருஷ்ணன், சோழவந்தான் தனி தொகுதியில் மாணிக்கம், மதுரை தெற்கில் சரவணன், மதுரை மேற்கில், அமைச்சர் செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் தொகுதியிலும், அய்யப்பன், உசிலம்பட்டியிலும், லோகிராஜன் ஆண்டிப்பட்டியிலும், முருகன் பெரியகுளம் தனி தொகுதியிலும், சையது கான், கம்பத்திலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையத்திலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் மான்ராஜ், சாத்தூரில் ரவிச்சந்திரன், சிவகாசியில், லட்சுமி கணேசன், அருப்புக்கோட்டையில், அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன், பரமக்குடியில் சதன் பிரபாகர், திருவாடானையில், ஆணிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூரிலும், சின்னப்பன், விளாத்தி குளத்திலும், கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரிலும், மோகன் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியிலும், அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியிலும், அமைச்சர் ராஜலெட்சுமி சங்கரன் கோவில் தனி தொகுதியிலும் களம் இறங்குகின்றனர்.

வாசுதேவநல்லூர் தனி தொகுதியில் மனோகரன், கடையநல்லூரில் கிருஷ்ணமுரளி, தென்காசியில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்,அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டையில் ஜெரால்டு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குநேரியில் கணேசராஜா, ராதாபுரத்தில் இன்பதுரை, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், பெரம்பலூர் தனி தொகுதியில் இளம்பை இரா.தமிழ்செல்வன், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version