தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலில், மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3 ஆயிரத்து 585 பேரும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும் களத்தில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக அரவக்குறிச்சியில், 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்காக, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அவற்றுடன், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

Exit mobile version