ஔவையார் உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னையில் தமிழ்ப் புலவர் ஔவையார் உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்ப் புலவர் ஔவையார் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பென்ஜமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Exit mobile version