தமிழ் மொழியை, இனத்தை 2-ஆம் நிலைக்குத்தள்ள அனுமதிக்க மாட்டோம் என மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகரில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மாபெரும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மொழிக்காக உழைத்து உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டும், அவர்களைப்பற்றியும் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சிறப்பு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழ் மொழியை, இனத்தை 2-ஆம் நிலைக்குத்தள்ள அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.