இலங்கை வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக பெயர் பலகையில் தமிழ்

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டும் என புதிய ஆளுநராக பதவியேற்ற சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். இலங்கை வட மாகாணத்தின் ஆளுநராக பணியாற்றிய ரெஜினோல்ட் குரேவை அதிபர் சிறிசேனா பதவி விலக்கியதையடுத்து, புதிய ஆளுநராக சுரேன் ராகவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆளுநர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version